Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12 ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்?? இதோ மத்திய அரசில் உங்களுக்கான வேலை!!

12ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்? இதோ மத்திய அரசில் உங்களுக்கான வேலை!!

பொதுவாக மத்திய அரசின் வேலைகள் சம்பந்தப்பட்ட துறை மூலமாக அறிவிக்கப்படும். உதாரணமாக staff selection commission, Postal, Railway, UPSC போன்ற துறைகளில் மூலம் அந்தந்த துறைகளுக்கு தேவைப்பட்ட காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகளை பற்றி செய்திகள் அறிவிக்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பு பற்றி செய்திகள் அந்தந்த அதிகார வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகுதிகள் பொறுத்தவரை அந்தந்த துறைகள் பொருத்து மாறுபடும். இவை அந்தந்த துறைக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது அதற்கான கல்வி தகுதியையும் சேர்த்து அறிவிக்கப்படும்.

தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

* பணி – Lower Division Clerk, Junior Secretariat Assistant
* காலிப் பணியிடம் – 4500
* வயதுவரம்பு – 18-27
* சம்பளம் – 25,500 – 81,100
* கல்வித் தகுதி- 12 ஆம் வகுப்பு
* தேர்வு முறை- கணினி வழி தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஜனவரி 4

இது பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Exit mobile version