உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக பருகும் பானம் காபி என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.தினமும் கோடிக்கணக்கான மக்கள் காபியை ருசி பார்க்கின்றனர்.மழை நேரத்தில் சூடான காபி பருக பலரும் விரும்புகின்றனர்.
பெரும்பாலானோருக்கு காலை நேர எனர்ஜி ட்ரிங்க்காக காபி இருக்கிறது.பாலை கொதிக்க வைத்து காபித் தூள் சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைத்து போன்று இருக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.காபி குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.இது உலகளவில் உற்சாக பானமாக திகழ்கிறது.
இந்த காபியின் சுவை மற்றும் மணம் அதற்கு அடிமையாக வைக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் காபியை விரும்பி குடிக்கின்றனர்.இப்படி நம் வாழ்வில் ஒன்றிப்போன காபி உடலுக்கு நல்லதா இல்லை கெட்டதா என்பது குறித்த ஆய்வுகள் இன்றுவரை நடைபெற்று வருகிறது.
அளவிற்கு அதிகமாக காபி குடித்தால் இதய நோய் பாதிப்பு வரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.காபியில் நிறைந்துள்ள காஃபின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.எனவே நாளொன்றில் ஒன்று அல்லது இரண்டு கப் காபி என்று அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.அதிகமாக காபி குடித்தால் நம் ஆயுட்காலம் குறையும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
காபியில் தீமைகள் நிறைந்திருந்தாலும் அதில் சில நன்மைகளும் காணப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.காபி குடிப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் சொல்கிறது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க தினமும் அளவாக காபி பருகலாம்.கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு கப் காபி பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள காபி பானத்தை பருகலாம்.
காபியில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இரத்த சர்க்கரை சீர்படுத்த உதவுகிறது.காபி குடிப்பதால் உடலில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.உடல் எடை குறைய காபியை பருகலாம்.காபி பானம் உடலில் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.பால் சேர்க்காத காபியில் அதாவது தண்ணீரில் காபி தூள் சேர்த்து கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆனால் இரவு நேரத்தில் காபி குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் காபி குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.நீரிழிவு நோய்,இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.