நீங்கள் தினமும் சிக்கன் சாப்பிடுபவரா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்..!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அசைவம் என்றால் அவை சிக்கன் தான். ஒருசிலரால் தினமும் சிக்கன் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. நாவிற்கு அவ்வளவு ருசியை கொடுக்கும் இந்த சிக்கன் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எப்பொழுதாவது உங்கள் மனதில் தோன்றி இருக்கிறதா? ஆசைக்காக என்றாவது ஒருநாள் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு பெரிய தீங்கு ஏற்படாது. ஆசைக்கு மீறி சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:-
1)தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் உள்ள எலும்புகள் தனது ஆரோக்கியத்தை இழந்து விடும். சிக்கனில் உள்ள புரதம் எலும்புகளுக்கு தேவையற்ற கெட்ட புரதத்தை அளித்து எலும்பு தேய்மானம், வலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
2)சிக்கனில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் கலோரிகள் நமது உடல் எடையை விரைவில் கூட்டி விடும். இதனால் மாரடைப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
3)வறுத்த, பொரித்த சிக்கனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் கெட்டுவிடும்.
4)சிக்கன் சூடு நிறைந்த பொருளாகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் சூடு அதிகரித்து மூக்கில் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
5)சிக்கனில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸிஸ் பெருங்குடலில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது.
6)தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும்.
7)தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களுக்கு மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.