தினமும் கிரீன் டி குடிப்பவர்களா நீங்கள்? ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்கலாம்? 

0
138
Are you a daily green tea drinker? How many cups can you drink a day?
தினமும் கிரீன் டி குடிப்பவர்களா நீங்கள்? ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்கலாம்?
கிரீன் டீ குடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகின்றது என்பது பற்றியும் ஒரு. நாளைக்கு எத்தனை கப் கிரீன் டி குடிக்கலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
டீயில் பல வகை இருக்கின்றது. பால் டீ, மூலிகை டீ, கிரீன் டீ, எலுமிச்சை டீ என்று பல வகை இருக்கின்றது. இதில் பொதுவாக அனைவருக்கும் பால் டீ குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள். டீ குடிப்பதால் குறிப்பாக கிரீன் டீ குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது.
கிரீன் டீ என்பது டீ தூளுக்கு பதிலாக பச்சை தேயிலையை வைத்து தயார் செய்யப்படும் டீ ஆகும். பால் டீ, பிளாக் டீ ஆகியவற்றை விட இந்த கிரீன் டீயை நாம் குடிக்கும் பொழுது நம்முடைய உடலில் பல விதமான நோய்கள் குணமாகின்றது.
கிரீன் டீயை குடிப்பதால் குணமடையும் நோய்கள்…
* நாம் தொடர்ந்து கிரீன் டீ குடித்து வரும் பொழுது வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
* கிரீன் டீ குடிப்பதால் எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.
* கிரீன் டீ குடித்து வந்தால் கணையம் தொடர்பான பிரச்சனைகள் குணமடைகின்றது.
* இதய நோய்கள் உள்ளவர்கள் அனைவரும் கிரீன் டீ குடித்து வந்தால் போதும். இதய நோய்கள் குணமாகும். மேலும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம்.
* நீரிழிவு நோய் உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுப்படுகின்றது.
* கிரீன் டீ குடித்து வந்தால் வயிறு வலி, வயிற்று புண், வயிறு எரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் குணமடைகின்றது.
* கிரீன் டீ குடித்து வந்தால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
இவ்வாறு பல நன்மைகளை நமக்கு அள்ளித்தரும் கிரீன் டீயை ஒரு நாளுக்கு நாம் 5 கப் டீ குடிக்கலாம். அதற்கு மேல் குடித்தால் பின்விளைவுகள் ஏற்படும்.