டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்படியெனில் இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு தான்!
கேந்திரிய பள்ளிகளில் உள்ள காலியிடங்களில் உள்ள நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டள்ளது.
கேந்திரிய வித்யாலய சங்கதன் என்பது ( மத்திய பள்ளிகளின் கூட்டமைப்பு ) என்பது மத்திய அரசின் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தில் நிர்வகிக்கப்படும், மத்திய அரசு பள்ளியாகும். இந்த பள்ளிகள் இந்தியாவில் மட்டும் இன்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
1950-இல் 3 பள்ளிகளுடன் தொடங்கி 1248 பள்ளிகள் இந்தியாவிலும் 3 பள்ளிகள் அயல்நாட்டிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி அமைப்பானது உலகளாவிய பள்ளிகளில் முதன்மையானது. 1963-இல் நடுவண் பள்ளிகள் என தொடங்கப்பட்ட இந்த பள்ளிகள் தற்போது கேந்திரிய வித்யாலயா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவை அனைத்தும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன்( CBSE) இணைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள இந்த பள்ளிகளிலும் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- காலி பணியிடங்கள்- 13404
- பணிகள் – முதல்வர், ஆசிரியர்கள், நூலகர் உட்பட பல பணிகள்
- கல்வித் தகுதி – பட்ட படிப்பு
- வயது – 50 க்குள்
- சம்பளம் – 35,400 – 2,09,200
- தேர்வு செய்யும் முறை – எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு
- விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி – டிசம்பர்-26
மேலும் இதுப்பற்றிய கூடுதல் விவரங்களினை அறிய kvsangathan.nic.in இணையதள பக்கத்தை அணுகவும்.