மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

0
135

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்ற போது அதில் புழு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இளைஞர்கள் அந்த கடையில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டிற்கு சென்று உள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அதில் புழு இருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உடனே அதை அப்படியே கொண்டு போய் எங்கு வங்கினார்களோ அந்த பிரியாணி கடைக்கு எடுத்து சென்று அதை காண்பித்து உள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளர் அவர்களிடம் அந்த சிக்கனை வாங்கி குப்பை தொட்டியில் வீசி விட்டு பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மேலும் இதை பெரிது படுத்த வேண்டாம் என சமாதானம் கூறி அனுப்பி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப்பற்றி திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டபோது இது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை எனவும் மேலும் நான் விடுமுறை என்பதால் வெளியே இருக்கிறேன் எனவும் சாதாரணமாக பதில் அளித்துள்ளார்.

அதனால் நீங்கள் வாங்கும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை குறித்து ஆலோசித்து பின் வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் உணவு பாதுகாப்பானதாக உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்ட பிறகு தரமான உணவுகள் அனைவருக்கும் கிடைக்கப் பெற மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.