Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

தற்போது பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அவரவர்கள் அணியும் உடைக்கேற்ற வண்ணத்தில் நெயில் பாலிஷ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான மருதாணி போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை மறந்து விட்டு,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கெமிக்கல் நிறைந்த மெஹந்தி,நெயில் பாலிஷ் போன்றவற்றை பயன்படுத்துவதிலேயே நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம்.

பலருக்கும் பிடித்த இந்த நெயில் பாலிஷ் வாங்கும் பொழுது விலை மற்றும் அதன் கலரை மட்டுமே பார்த்து வாங்குகின்றோம்.ஆனால் எத்தனை பேர் இந்த நெயில் போலீஷில் எந்த விதமான கெமிக்கல் கலக்கப்படுகின்றது என்பதனை பார்த்து வாங்க ஆர்வம் காட்டுகிறோம்?
இந்த நெயில் பாலிஷில் எப்படிப்பட்ட கெமிக்கல் கலக்கப்படுகின்றன என்பதனையும் அதனால் என்ன ஆபத்துகள் விளைய நேரிடும் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே நெயில் பாலிஷ் மூன்று விதமான டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கின்றது.

1: அதாவது நெயில் பாலிஷ் பாட்டிலில் கலக்கப்பட்ட கெமிக்கல் அச்சடிக்கப்பட்டு விற்கப்படுவது ஒரு ரகம்.

2: மற்றொன்று நாங்கள் இது போன்ற கெமிக்கல் எதுவும் கலக்கப்படவில்லை என்று அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது ஒரு ரகம்

3: மற்றொன்று இது போன்ற கெமிக்கல் பயன்படுத்துகிறோம் என்பது போன்று எதுவுமே அச்சடிக்கப்படாமல்,பிளைன் பாட்டிலில் விற்கப்படுவது ஒரு ரகம்.

இந்த மூன்றாவது ரகத்தையே பெரும்பாலானோர் வாங்குகின்றோம்.இதில் கெமிக்கல் கலக்கப்பட்டதா இல்லை கலக்கப்படாத என்று அறியாமலேயே நாம் விதவிதமாக வாங்கி அதனை அடிக்கடி பயன்படுத்துகின்றோம்.ஆனால் இப்படி பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷில் என்னென்ன கெமிக்கல் கலக்கப்படுகின்றது என்பது தெரியுமா?

பொதுவாகவே நெயில் பாலிஷில்
ஃபார்மாலிட்டிஹைட்
(formaldehyde), டொழுவின்(toluene),
டைபியுட்டையில் தலெட் (dibutyl phthalate), ஃபார்மால்டிஹைட்ரேசின்(formaldehyde resin),
கேம்பர்(Camphor)போன்ற மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய பல ஆபத்தான வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.

அதில் இந்த ஃபார்மால்டி கைடு என்னும் வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தை கொண்டதாகவும், டொழுவின் என்ற கெமிக்கல் கண் எரிச்சல்,சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்துதல், நரம்பு மண்டலத்தை தாக்குதல், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.டைபியுட்டையில் தலெட் (dibutyl phthalate) என்னும்
கெமிக்கல் தைராய்டு பிரச்சனை போன்ற பல்வேறு ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே நெயில் பாலிஷை வாங்கும் பொழுது இது போன்ற கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளதா என்பதனைபார்த்து வாங்குங்கள்.மேலும் இது போன்ற மனித உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்கள் கலந்த நெயில் பாலிஷ்யை நாம் அடிக்கடி பயன்படுத்துவதையும் நிறுத்துவது நம் உடல் நலத்திற்கு நன்மை பயக்குவதாகும்.

Exit mobile version