Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செவிலியரா நீங்கள்? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் : 2 மாதத்தில் நிரப்பப்படும் காலி பணியிடங்கள்!

செவிலியரா நீங்கள்? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் : 2 மாதத்தில் நிரப்பப்படும் காலி பணியிடங்கள்!

தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழகத்தில் இன்னும் இரண்டே மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் பருவகால பேரிடர், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம் மற்றும் பொது சுகாதாரப்பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், டெங்கு மலேரியா எச்1என்1 உள்ளிட்ட நோய்க்கு பாதிப்புகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.

மேலும் தமிழக முதலமைச்சர் சட்டசபையில் 78 நகர்புற நலவாழ்வு மையங்களை அறிவித்துள்ளார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதன் அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும்.

உடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ள சுகாதார பணிகளுக்கான திட்டம், மருந்து தட்டுப்பாட்டினை தடுக்க 5 மருந்து கிடங்குகள் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தம் 4307 செவிலியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் தற்போது வரை ஆயிரத்து 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version