Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!!

#image_title

ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!!

நம் பாரம்பரிய சிறு தானிய உணவு வகைகளில் ஒன்று ராகி(கேழ்வரகு).இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.அதேபோல் இதில் நாம் தினமும் குடிக்கும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இந்த ராகியில் இருக்கின்றது.

இதில் களி,லட்டு,புட்டு,கூழ்,தோசை,இட்லி,சப்பாத்தி,பூரி,சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதிக கால்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்டிருக்கும் ராகி பாலை 3 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

ராகி உணவு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத பயன்கள்:-

*ராகியில் அதிகளவு கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்சத்து,புரதம்,பொட்டாசியம்
மாங்கனீசு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

*இதில் உள்ள நார்ச்சத்து செரிமானம்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்கிறது.

*ராகியில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுவாக்குவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவுகிறது.

*சர்க்கரை நோய் பாதிப்பு இருபவர்கள் தினமும் ராகி உணவை உண்டு வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

*உடல் பருமனால் அவதிப்படும் நபர்கள் ராகியில் செய்யப்படும் உணவை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.காரணம் ராகியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

*உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ராகி உணவு பெரிதும் உதவுகிறது.

*அடிக்கடி ராகி உணவை உண்டு வந்தோம் என்றால் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடலுக்கு அதிகளவில் கிடைத்து விடும்.

*இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் ராகி உணவை சாப்பிடுவது நல்லது.

*இந்த ராகி உணவு கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது.

Exit mobile version