Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

#image_title

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

“ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழியைக் கேட்டு அஞ்சி பலரும் மூலம் நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய அஞ்சுவர்.

ஆனால், இந்த பழமொழி சற்றும் உண்மை கிடையாது. உண்மையான பழமொழி இது தான். “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்”

ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும் அன்று சந்திரனை குரு பகவான் பார்க்க நல்ல தசா புத்தி கூடி வரும் காலத்தில் பிறந்தால் அரசாளும் யோகம் உண்டு என்றும்

அதற்குப் பின் உள்ள பாதத்தில் பிறந்தால் சத்ருக்களை வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும் என்றும் அவர்களை நிர்மூலம் ஆக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

எனவே “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” என்பதே உண்மையான பழமொழி.

முக்கியமானது, மூல நட்சத்திரக்காரர்கள் தோல்வியை அதிகம் சந்தித்தால் வெற்றியாளர்களாக தான் இருப்பார்கள்.

இந்த மூல நட்சத்திரம் மிகவும் உன்னதமான நட்சத்திரம் ஆகும். இவர்களுக்கு ஜாதக பொருத்தம் கூட பார்க்கத் தேவையில்லை. இவர்களை மணம் கொள்ளும் ஆண் அல்லது பெண் வாழ்வில் நல்ல பலனை அடைவர்.

இந்த நட்சத்திரக்காரர்கள் விடா முயற்ச்சியால் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பாண்மை கொண்டவர்களாக இந்த மூல நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்.

Exit mobile version