Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு! 

#image_title

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு! 

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், உயிரியல், வேதியியல், விலங்கியல், கணிதம், தாவரவியல், விவசாயம், இயற்பியல், புள்ளியியல், வனம், போன்ற ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 150

வயதுவரம்பு: 1.8.2023 அடிப்படையில் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு  இதிலிருந்து வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு நேர்முகத்தேர்வு மற்றும் முதன்மை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதல் நிலை தேர்வு மையம்: மதுரை, கோவை, சென்னை, திருச்சி, வேலூர்.

முதன்மை தேர்வு: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 பெண்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.2.2023.

மேலும்  இது குறித்த விவரங்களை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version