Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூத்த குடிமக்களா நீங்கள்?? இதோ உங்களுக்காக பிரதமரின் அட்டகாசமான திட்டம்!!

Are you a senior citizen?? Here is PM's amazing plan for you!!

Are you a senior citizen?? Here is PM's amazing plan for you!!

நாடு முழுவதிலும் உள்ள மூத்த குடி மக்களுக்காக பிரதமர் மோடி அவர்கள் அருமையான திட்டம் ஒன்றை நாளை தொடங்கி வைக்க இருக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில் முக்கியமானதாக கருதப்படுவது மருத்துவம். அதிலும் வயதானாலே ஏராளமான வியாதிகள் கூடிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வேண்டியது கட்டாயம். இதை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் மூத்த குடி மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ அவசர நிலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சைகளுக்கு இந்த காப்பீட்டு திட்டம் உதவும்.

ஏற்கனவே மத்திய அரசு நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளைப் பெற்று ஏழை மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தை தற்போது  அரசு படிப்படியாக விரிவுபடுத்தி  70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை  ஆண்டுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டு திட்டத்தை நாளை செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் 4.5 கோடி குடும்பங்களை சேர்ந்த 6 கோடி மூத்த மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

Exit mobile version