Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலி உடன் சேர்த்து அணிவதால் வாழ்வில் உள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நமது நம்பிக்கையாகும். வில்வமாலை சிவனுடைய அருளையும், அன்பையும் பெறுவதற்கு ஒன்றே போதும்.

வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியின் தோன்றியது வில்வம். வில்வ மாலையை அணிந்து வருவதால் 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்தது போல் பல பலன்கள் உண்டாகும். தினந்தோறும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபடுவது என்பது இயலாத காரியமே.

வில்வ மரக்கட்டை கொண்ட ருத்ராட்ச மாலையை அணிவதால் சிவபெருமானின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்களைப் போல் காப்பவர்.

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகிறது. ருத்ராட்சம் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு மன தைரியத்தையும் தரவல்லது.

ருத்ராட்சம் எந்த சூழ்நிலையிலும் சமாளிக்கும் புத்திக் கூர்மையையும் பொறுமை,பக்குவம் மற்றும் அமைதியான மனநிலையை பெற்றுத்தரும். உடலுக்கும் மனதிற்கும் அதிகமாக சக்தி தரும் வல்லமை கொண்டது ருத்ராட்சம் மாலை.

கருங்காலி மரம் மின்கதிர் வீச்சுக்களை தன்னுள் சேர்க்கும் தன்மை கொண்டதால் வீட்டில் கருங்காலி வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்கள் அதிகரிக்கும். சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலி உடன் சேர்த்து அணிவதால் முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் அது மட்டுமல்லாமல் மன அமைதி கிடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வல்லது மற்றும் நம் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களில் இருந்து பாதுகாக்க கூடியது இந்த ருத்ராட்ச வில்வ மாலை.

Exit mobile version