நாம் தூங்குவதற்கு கட்டில் வேண்டும் என கேட்கிறோமோ இல்லையோ தலையணை கண்டிப்பாக வேண்டும் என கேட்டு வாங்கி தூங்குவோம். அதிலும் ஒரு சிலர் இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். ஒரு சில வீடுகளில் மிகவும் கனமான மற்றும் தடிமனான தலையணைகளை வைத்திருப்பார்கள். இவ்வாறு தலையணைகளில் படுப்பது நல்லதா? இதனால் நமது உடல் நலத்திற்கு தீங்கு வருமா? என்பது குறித்து காண்போம்.
பொதுவாக நாம் தூங்கும் பொழுது எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு சிலர் ஒரு பக்கமாக படுப்பார்கள்.அதற்கு LATERAL DECUBITUS POSITION என்று பெயர். 55-60% மக்கள் இந்த முறையில் தான் படுப்பார்கள். இந்த முறையில் படுபவர்கள் 10 முதல் 15 சென்டிமீட்டர் அளவுள்ள தலையணையை தான் வைத்து தூங்க வேண்டும்.
தலையணை என்பது கல்லு போன்று இல்லாமல் மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும். இதுபோன்ற தலையணைகளை வைத்து படுத்தால் தான் நமது உடம்பிற்கு எந்தவித வலிகளும் ஏற்படாது, அதேபோன்று நமது முதுகு தண்டுவடத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு ஒரு புறமாக படுப்பவர்கள் அவர்களது காலுக்கு இடையில் சிறியதாக ஒரு தலையணையை வைத்து தூங்கும் பொழுதும் தண்டுவடம் சீராக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று மல்லாந்து படுப்பதை SUPINE POSITION என்று கூறுவார்கள்.20-25% மக்கள் தான் இந்த முறையில் படுப்பார்கள். இவர்கள் 10 முதல் 15 சென்டிமீட்டருக்கு கீழ் உள்ள தலையணைகளை வைத்து படுப்பது நல்லது. இவர்கள் தூங்கும் பொழுது கால்களுக்கு அடியில் ஒரு சிறிய தலையணையை வைத்து தூங்குவதனால் முதுகு தண்டுவடம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் வலி குறையும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இந்த முறையில் படுக்கக் கூடாது எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதேபோன்று குப்புற படுப்பவர்கள் மற்றும் பல விதங்களில் மாற்றி கொடுப்பவர்கள் 15-20% வரை உள்ளனர். இவ்வாறு படுப்பதனை PRONE POSITION என்று கூறுவர். இந்த முறையில் படுப்பதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. எனினும் அவ்வாறு படுப்பவர்கள் தலையணை இல்லாமல் படுப்பது நல்லது எனவும் கூறியுள்ளனர்.
ஒரு சிலருக்கு காலையில் தூங்கி எழும் பொழுது மிகவும் சோர்வாகவே இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அவர்கள் படுக்கும் முறையை வைத்து இந்த விதிகளை பின்பற்றினால் உடல் சோர்வாக இருக்காது. அதேபோன்று நாம் வைக்கும் தலையணையானது மிகவும் பெரியதாகவும் இல்லாமல் மிகவும் சிறியதாகவும் இல்லாமல் சரியான அளவில் இருந்தால்தான் முதுகு தண்டு வடமானது நேராக இருக்கும். இதனால் தூங்கி எழும்பும் பொழுது எந்த வலியும் இருக்காது.
அதேபோன்று தலையணையில் தலையை மட்டும் தான் வைத்து உறங்க வேண்டும். ஒரு சிலர் தோள்பட்டை வரையிலும் தலையணையில் வைத்து உறங்குவர். இவ்வாறு உறங்கினாலும் உடல் சோர்வு ஏற்படும். எந்தவித உடல் சோர்வும் உடல் வலியும் ஏற்படாமல் இருக்க விட்டமின் சத்துக்கள் மற்றும் கால்சியம் சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மிகவும் கனமான அல்லது இரண்டு தலையணைகளை வைத்து தூங்குபவர்களா நீங்கள்!! அப்போ கவனமாக இருப்பது நல்லது!!

Are you a sleeper with a very heavy pillow or two!! So be careful!! Are you a sleeper with a very heavy pillow or two!! So be careful!!