ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளரா நீங்கள்? ஆன்லைன் பண மோசடி பற்றிய புதிய தகவல்!!
இந்த டெக்னாலஜி உலகில் நூதன முறையில் பணம் மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.உங்கள் அக்கவுண்டிற்கு ஒரு கோடி பரிசு வந்துள்ளது, இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்றெல்லாம் மக்களுக்கு ஆசை காட்டி அவர்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் உங்களுக்கு பரீட்சயம் இல்லாத ஏதேனும் அழைப்பு வந்தால் கவனமாக இருக்கும் படி கூறியுள்ளது.அவ்வாறு வரும் அழைப்புகளுக்கு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அழைப்பை துண்டித்து விடுமாறு தெரிவித்துள்ளனர். மேலும் எஸ் எம் எஸ் வடிவில் ஏதேனும் லிங்க் வந்தாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். பணம் தேவை அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில், அதனையே மையமாக வைத்து ஆசை காட்டி உங்களது கணக்கில் இவ்வளவு ரூபாய் வந்துள்ளது என்று கூறுவர். அதனை எல்லாம் நம்பி பணத்தை பறி கொடுத்து விட வேண்டாம் எனக் ஸ்டேட் பாங்க் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.