வயதான காலத்தில் சிறுநீரக கோளாறு,வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது.இந்த பாதிப்புகள் அனைத்தும் சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:
1)குருணை அரிசி
2)சிறு திராட்சை
3)நன்னாரி
4)திப்பிலி
5)சுக்கு
ஒரு கிண்ணத்தில் 50 கிராம் குருணை அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவிடவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் கொட்டி காய வைக்கவும்.
அதன் பிறகு மிக்ஸி ஜாரில் குருணை அரிசியை கொட்டி கொரகொரப்பாக அரைக்கவும்.இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி விடவும்.
பிறகு சிறிதளவு நன்னாரி,ஒரு திப்பிலி மற்றும் ஒரு துண்டு சுக்கை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.இதை அரைத்த குருணை அரிசியில் சேர்க்கவும்.பிறகு நான்கு அல்லது ஐந்து சிறு திராட்சையை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
இதை அடுப்பில் வைத்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.இந்த கஞ்சியை ஆறவிட்டு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1)நெருஞ்சி முள் விதை பொடி
2)தண்ணீர்
நாட்டு மருந்து கடையில் நெருஞ்சி முள் விதைப்பொடி கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இந்த நீரில் நெருஞ்சி முள் விதைப்பொடி ஒரு தேக்கரண்டி கலந்து குடித்தால் சிறுநீரக பை வீக்கம்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)இஞ்சி
2)தேன்
ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவிவிட்டு பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1)வெந்தயம்
2)தண்ணீர்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும்.இவ்வாறு செய்வதால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக சரியாகும்.