Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐசிஐசிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவரா நீங்கள் இத கொஞ்சம் படிங்க

ஐசிஐசிஐ வங்கி தனது கட்டண முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். NEFT, RTGS,UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டண முறைகளை ரத்து செய்திருந்தது.

சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருக்கிறது. தங்களது கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்ட இந்த அறிவிப்பு புரியாமல் வாடிக்கையாளர்கள் இதுக் குறித்து தெளிவான தகவல்கள் தெரியாமல் குழம்பி வருகின்றன.

அந்த அறிவிப்பின் படி வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கு ரூ.100 முதல் ரூ.125 வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் இதுமட்டுமல்லாமல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

அதாவது, ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட், மற்றும் சேலரி அக்கவுண்ட் தொடர்பவர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதி.நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் எந்த கிளையில் அல்லது நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி என எங்கு பணத்தை டெபாசிட் செய்தாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட்ட தொகையை செலுத்த வேண்டும். அதே போல் உங்கள் அக்கவுண்டில் இருந்து நீங்கள் பணம் எடுத்தாலும் அதற்கும் தனி கட்டணம்.
ATM- இல் எடுத்தால் இந்த விதி பொருந்தாது. வங்கிக்கு சென்று நேரில் எடுத்தால் மட்டுமே இந்த விதியும் பொருந்தும்.

Exit mobile version