Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

#image_title

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு ஏதோ ஒரு துறையில் இளநிலை பட்டம் மற்றும்   இளங்கலை கல்வியில் பட்டம் (பி. எட்) முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு வயது வரம்பு 40 அறிவித்துள்ளது  டிஆர்பி.

இதற்கு முதலில் கட்டாய  தமிழ் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய் எனவும்  எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் 300 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆன்லைன்  முலம் விண்ணப்பிக்க http://www.trb.tn.gov.in என்ற வெப்சைட் தந்துள்ளார்கள் .இந்த அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 5 கடைசி நாள் என தெரிவிக்கபட்டுள்ளது.

Exit mobile version