Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

 

கே.வி.பி கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள கிளை விற்பனை மேலாளர் பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதும்.மேலும் முக்கியமாக வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கான விவரங்கள் இதோ உங்களுக்காக:நிறுவனம் மற்றும் அதன் அமைப்பின் பெயர் கே.வி.பி கரூர் வைசியா வங்கி ஆகும்.அவற்றின் முக்கியமான பதவிகளின் பெயர்,கிளை விற்பனை மேலாளர். இந்நிலையில் அதற்கு தகுந்த மொத்த காலியிடங்கள் எண்ணிக்கைகள் பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.எப்படி விண்ணப்பிக்க வேண்டும் வாங்க பார்க்கலாம், விண்ணப்பதாரர்கள் தகுந்த சான்றுகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in careers pageசென்று பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டதாரி பட்டம் படித்திருக்க வேண்டும். மதிப்பெண் சதவீதம் 50 ஆக இருக்க வேண்டும்.அனுபவம் வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 6 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை ஆளுமை மதிப்பீட்டு சோதனை, தனிப்பட்ட நேர்காணல், பின்னணி மற்றும் மருத்துவச் சோதனை ஆகிய தேர்வு முறைகளில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இதனை விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Exit mobile version