Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதற்கு எடுத்தாலும் கோபத்தை கக்குறிங்களா? உங்கள் ANGER கன்ட்ரோல் ஆக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

மனிதர்களுக்கு கோபம்,வலி,மகிழ்ச்சி,வலி,ஏமாற்றம் போன்றவை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.இதில் கோபம் என்பது மனிதர்களின் வாழ்க்கையாவே அழித்துவிடும் ஆயுதமாகிவிடுகிறது.கோபத்தில் வார்த்தையை விட்டால் அது உறவில் பிளவை ஏற்படுத்திவிடும்.

சிலர் எதற்கு கோபப்படுகிறோம் என்று தெரியாமலையே வாழ்கின்றனர்.கோபம் ஒரு மனிதனை கொல்லும் கூர்மையான ஆயுதமாகும்.ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் உறவுகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.

அதிக கோபம் இரத்த அழுத்தம்,தலைவலி,சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது.இதுபோன்ற உடல் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க கூடாது என்றால் நீங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

வீண் விவாதம்,தனிப்பட்ட பிரச்சனை மற்றும் பிறரின் செயல்பாட்டால் தான் கோபம் உருவாகிறது.

கோபத்தை கட்டுப்படுத்த வழிகள்:

1)முதலில் கோபம் வரும் சமயத்தில் சிறிது நேரம் பொறுமை காப்பது நல்லது.இதனால் கோபம் வெளிப்படுவது கட்டுப்படும்.

2)வீண் விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவர் உங்களை தொடர்ந்து கோபப்படுத்திக் கொண்டிருந்தால் அவரிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

3)தினமும் தியானம்,ஆசனம்,நடைபயிற்சி செய்து வந்தால் கோபம் ஏற்படுவது கட்டுப்படும்.

4)கோபத்தை கட்டுப்படுத்த தங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு நேரத்தை கழியுங்கள்.

5)உங்களுக்காக நேரத்தை செலவிடுங்கள்.சில நேரம் தவறான முடிவுகளால் கோபம்,மன அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே சரியான முடிவுகளை எடுக்க பழகிக்கொள்ளுங்கள்.

6)கோபத்தை கட்டுப்படுத்த உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட பழகுங்கள்.

Exit mobile version