உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!!

0
90
#image_title

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!!

தற்காலத்தில் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் ஆகும். நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல் முறையற்ற தூக்கம், மன அழுத்தம், இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது போன்றவைகளால் இளம் வயது வழுக்கை ஏற்படுகிறது. இதனால் விரைவில் வயதான தோற்றத்தை பலருக்கும் அடையும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியம் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*உருளைக்கிழங்கு – 1

*முட்டையின் மஞ்சள் கரு – 1

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1 பெரிய சைஸ் உருளைக்கிழங்கு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளாவும். பின்னர் அதன் தோலை சீவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

அடுத்து தோல் நீக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும். அதை தண்ணீர் ஊற்றாமல் மைய்ய அரைத்து கொள்ளவும். பிறகு இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து அதில் 1 தேக்கரண்டி தூயத் தேன் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு 1 சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 30 நிமிடங்கள் விடவும்.

பின்னர் கொதிக்க வைத்துள்ள உருளைக்கிழங்கு தோலின் நீரை ஆற்றவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை தலைக்கு நன்கு ஸ்பிரே செய்து கொள்ளவும்.

இதை 15 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் இழந்த முடிகளை வளரவைக்க முடியும். அதேபோல் வழுக்கை பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து விடும்.