புதன்கிழமையில் பிறந்தவர்களின் முகம் ஒரு கலையுடன் காணப்படும். இவர்களுக்கு இயல்பிலேயே நலினம் கொஞ்சம் அதிகமாக காணப்படும். எனவே அதிக வெட்கம் படுபவர்களாக புதன்கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள். அதேபோன்று நகைச்சுவை உணர்வும் இவர்களிடம் அதிகம் காணப்படும்.
படிப்பின் வாயிலாக பெறக்கூடிய அறிவை விட, அனுபவத்தின் வாயிலாக பெறக்கூடிய அறிவை தான் மிகவும் நம்புபவர்களாக இருப்பார்கள். அறிவுக்கு மட்டுமே அடிபணிய கூடியவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். தாய் வழி உறவுகளின் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு செயலையும் இறங்கி செய்பவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.
திறமை உள்ளவர்களை பார்த்த உடனேயே இவர்கள்தான் அவர்களை பாராட்ட ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்களை யாரேனும் புகழ்ந்தால் அதனை விரும்ப மாட்டார்கள். ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்யாமல் மிகவும் இஷ்டப்பட்டு செய்வார்கள். அதிலும் கடின உழைப்பை காட்டிலும் யோசித்து விரைவில் ஒரு செயலை எவ்வாறு முடிப்பது என தெரிந்து கொண்டு செயல்படுபவர்களும் இவர்கள்தான். அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை கண்டு கலங்காமல், ஒரு சிறிய புன்னகையில் அதனை கடந்து சென்று விடுவார்கள்.
புதன்கிழமையில் பிறந்தவர்கள் ஆசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும், திரைத்துறையில் தொழில் புரிபவர்களாகவும் இருப்பார்கள். வறுமையும், கடனும் இவர்களை ஆட்டி படைக்கும் ஆனால் இவை அனைத்தையும் தெய்வத்தின் அணுக்கிரகத்தினால் எளிதில் கடந்து விடுவர். ஒரு பிரச்சனைக்கான தீர்வை எளிதில் காண்பவர்களாகவும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். இன்னும் சொல்லப்போனால் 100 பேர் இருக்கக் கூடிய இடத்தில் இவர்கள் அளிக்கக்கூடிய பதிலுக்கு சிறந்த மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படும்.
ஆராய்ச்சியில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். இதனால் தொல்லியல் துறையிலும் இவர்களின் நாட்டம் அதிகமாக இருக்கும். புதன்கிழமையில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் மிகவும் அன்பானவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு வாதம் சம்பந்தமான பிரச்சனைகள், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே இது போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
புதன்கிழமையில் பிறந்தவர்கள் மரம், செடிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். நரசிம்மர் வழிபாடு செய்யலாம். துளசி செடியை வீட்டில் வளர்த்து அதனை தீர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளை மற்றும் நீலம் நிறம் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறமாக அமையும். ஏதேனும் ஒரு முக்கியமான வேலையை செய்ய செல்லும் பொழுது இந்த நிறத்தில் ஆடை அணிந்து சென்றால் பலன் கிடைக்கும்.
அதே போன்று திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்வது இவர்களுக்கு சிறப்பை தரும். அவர்களுக்கு உரிய மரியாதையையும் கொடுக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. தாய்மாமன் உறவு மற்றும் தாய் மாமனின் வார்த்தையை புதன்கிழமையில் பிறந்தவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
நீங்கள் புதன்கிழமையில் பிறந்தவரா!!உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான்!!

Are you born on a wednesday!!This is your life secret!!