நீங்கள் வாங்குவது நல்ல மீனா? கெட்டுப்போன மீனா? தெரிந்து கொள்ள.. இந்த 2 ட்ரிக்ஸ் போதும்!!

0
332
Are you buying good fish? A spoiled fish? To know.. these 2 tricks are enough!!

நீங்கள் வாங்குவது நல்ல மீனா? கெட்டுப்போன மீனா? தெரிந்து கொள்ள.. இந்த 2 ட்ரிக்ஸ் போதும்!!

உங்களில் பலர் மீன் விரும்பிகளாக இருப்பீர்கள்.மீன்களில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால் அவை உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.மீன் இதய நோய்,மூளை சார்ந்த பாதிப்புகளை குணமாக்க உதவுததால் தான் மருத்துவர்கள் இதை சாப்பிட சொல்லி பரிந்துரை செய்கின்றனர்.

அதிலும் கடல்வாழ் மீன்களில் அதிகளவு சாச்சுரேட் கொழுப்பு நிறைந்திருப்பதால் இவை உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாக மீனை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இதர அசைவங்களை காட்டிலும் மீனில் அதிகளவு சத்துக்கள் மற்றும் சுவை நிறைந்திருப்பதால் தான் பெரும்பாலானோர் மீனை விரும்பி உண்கின்றனர்.மீன் ஓர் ஆரோக்கிய அசைவம் என்பதினால் விலை அதிகமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பலர் வாங்கி உண்கின்றனர்.இவ்வாறு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க கூடிய மீனை சந்தையில் வாங்கும் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டும்.சிலர் லாப நோக்கத்துக்காக பழைய மீன்களை விற்கின்றனர்.இது தெரியாமல் நாம் வாங்கி விடுகின்றோம்.கெட்டுப்போன மீன்களை உண்டால் நம் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து விடும்.

எனவே சில நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் நல்ல பிரஸ் மீன் எது? கெட்டுப்போன மீன் எது? என்று அறிந்து வாங்க முடியும்.

பெரும்பாலான கடைகளில் மீன்களை ஐஸ்கட்டியில் வைத்து 2 நாட்கள் வரை விற்பனை செய்கின்றனர்.ஆனால் இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்களை வாங்கி உண்டால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும்.

பிரஸ் மீன்களை கண்டறிந்து வாங்குவது எப்படி?

நீங்கும் வாங்கப் போகும் மீனை மீனை கையில் வைத்து விரலில் அழுத்துங்கள்.இவ்வாறு செய்யும் பொழுது மீனில் குழி போன்று உருவாகி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தால் அவை பிரஸ் மீன் ஆகும்.

அதேபோல் மீனின் செவுல் பகுதியில் சிவப்பு நிறத்தில் இருந்தால் அவை பிரஸ் மீன் என்று அர்த்தம்.இதனால் சில மீன் வியாபாரிகள் செவுல் பகுதியில் சிவப்பு நிறங்களை சேர்க்கின்றனர் என்ற புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.ஆகவே மீனின் செவுல் பகுதியை தடவி பார்த்து வாங்குவது நல்லது.