வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!!

0
196
#image_title

வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!!

நமது தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பத்திரப்பதிவு தொடர்பான சில சட்டங்களை கொண்டுவந்துள்ளது.

அச்சட்டங்களாவன நிலமனை விற்கும்போது நில விற்பனையாளர்கள் தங்கள் நிலத்தில் கட்டிடம் உள்ளதை மறைத்து பத்திரம் பதித்து மோசடி செய்கின்றனர்.இனி நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தின் புகைப்படத்தை அந்த நிலப்பத்திரத்துடன் இணைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சார்பதிவாளர் அலுவகங்களில் பத்திரம் பதிவோர் இனி அந்த பத்திரத்துடன் வீட்டுமனையின் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.அதுமட்டுமன்றி பதிவாளர் அலுவலகத்தில் பதியும் முழு ஆவணத்தின் முழு புகைப்பட நகலும் இணைக்கப்படவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.இச்சட்டம் அக்டோபர் 1 தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் மோசடி செய்பவர்கள் புதுப்புது வழிகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.இதனை தடுக்க மனை விற்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கும்  சார் பதிவாளார் அலுவலகம் சார்பாக வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் எனவும் சார் பதிவாளர் துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சார்பதிவாளர் துறைத்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பின்வரும் வழிகாட்டுதல்களை கூறியுள்ளார்.தங்கள் விற்கவிருக்கும் அல்லது வாங்கவிருக்கும் மனையின் முழுபகைப்பட மாதிரியையும் புகைப்படம் ஏ4 அளவில் மாதிரி எடுத்து பத்திரத்துடன் இணைத்து அதற்கு பக்க எண் வழங்கவேண்டும். அந்த பத்திரத்தில் விற்பவர் வாங்குபவர் என இருவருமே கையெழுத்திடவேண்டும்  எனவும் துறை அலுவலர் கூறியுள்ளார்.

சில பத்திரங்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவைகளாவன நிதி நிறுவனங்களில் கடன் பெற தாக்கல் செய்யப்படும் அடமான பத்திரம், ஆவண ஒப்படைப்பு பத்திரம், நிறுவனங்களால் கடன் கணக்கு முடிவில் எழுதி கொடுக்கப்படும் ரசீது ஆவணம், உயில் உள்ளிட்ட பத்திரங்களுக்கு, இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.இந்நிலையில் விலக்கு அளிக்கப்பட்ட பதிவாளர்கள்  எந்த புகார்களும் எழாதவகையில் பத்திரம் பதியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.