தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உலர்ந்த கருப்பு திராட்சையை இப்படி சாப்பிடுங்க! 

0
192
Are you constantly coughing? So eat dried black grapes like this!
தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உலர்ந்த கருப்பு திராட்சையை இப்படி சாப்பிடுங்க!
நம்மில் பலருக்கும் தொடர்ச்சியான இருமல் பிரச்சனை இருக்கும். இதை சரி செய்வதற்கு கருப்பு திராட்சையை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருப்பு திராட்சையை நாம் சாதாரணமாக சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். இந்த உலர்ந்த கருப்பு திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலை பலவிதமான நோய்களில் இருந்து பாதுகாக்கின்றது. இந்த கருப்பு திராட்சையை இருமலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தொடர்ச்சியான இருமலுக்கு கருப்பு திராட்சையை பயன்படுத்தும் முறை…
1. தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது…
முதலில் 8 முதல் 10 உலர்ந்த கருப்பு திராட்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர். இதை தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த உலர்ந்த கருப்பு திராட்சைகள் அனைத்தையும் ஒரு. கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர் இந்த கருப்பு திராட்சையை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடும் பொழுது இருமல் பிரச்சனை குணமாகும்.
2. சூடான பாலில் போட்டு சாப்பிடுவது…
அடுத்து ஒரு டம்ளர் அளவு பால் எடுத்து நன்கு சூடாக்கி கொள்ள வேண்டும். பின்னர் இந்த பாலில் 8 முதல் 10 உலர்ந்த திராட்சைகளை போட்டு 10 நிமிடம் வரை விடவேண்டும். 10 நிமிடம் கழிந்து இந்த பாலை திராட்சையுடன் சாப்பிட்டால் இருமல் பிரச்சனை குணமாகும்.