Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுளீர்னு இடுப்பு ஓரத்தில் வலி வருதா? அப்போ இந்த ஒரு ஆயிலை அங்கு பூசுங்கள்!!

வேலி மற்றும் மரங்கள் மீது படர்ந்து வளரும் தாவரமான பிரண்டை அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிரண்டை எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் மருந்தாக திகழ்கிறது.

பிரண்டையில் காணப்படும் அத்தியாவசிய சத்துக்கள்:-

1)வைட்டமின் சி
2)வைட்டமின் ஈ
3)கால்சியம்
4)பாஸ்பரஸ்
5)நார்ச்சத்துக்கள்
6)பிளவனாய்டு டேனின்
7)கரோட்டின்

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை மூலிகை தைலம்:

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – 50 மில்லி
2)பிரண்டை துண்டுகள் – கால் கப்
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் பிரண்டை எடுத்து அதன் நார் மற்றும் மேல் தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் இரும்பு வாணலி வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் சிறிது சூடானதும் கொரகொரப்பாக அரைத்த பிரண்டையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நல்லெண்ணெயில் பிரண்டை கலவை நன்கு கலந்து நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

இந்த எண்ணையை ஆறவைத்து பாட்டில் ஒன்றில் வடிகட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை இடுப்பு பகுதியில் அப்ளை செய்து வந்தால் வலி குறையும்.

இடுப்பு வலி,மூட்டு சார்ந்த பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த தைலத்தை பயன்படுத்தி வரலாம்.அதேபோல் பிரண்டையை நன்றாக காயவைத்து பொடித்து நீரில் கலந்து பருகி வந்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

பிரண்டையில் சட்னி,பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எலும்புகள் வலிமையாக இருக்கும்.பிரண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி,ஆண்மை குறைவு,பசியின்மை போன்ற பாதிப்புகள் குணமாகும்.

Exit mobile version