அனைவருக்கும் உடல் வலி வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் வழக்கத்தைவிட உடல் வலி,அசதி அதிகமாக இருந்தால் வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதில் உளுந்து பருப்பில் சுவையான புட்டு செய்து சாப்பிடுங்கள்.உளுந்தில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் வலியை குறைக்க உதவுகிறது.
உடல் அசதி நீங்க உதவும் வெள்ளை உளுந்து புட்டு:
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை உளுந்து – 100 கிராம்
2)பச்சரிசி – 50 கிராம்
3)தேங்காய் துருவல் – அரை கப்
4)நாட்டு சர்க்கரை – 100 கிராம்
5)நெய் – இரண்டு தேக்கரண்டி
6)முந்திரி – 20 கிராம்
7)தண்ணீர் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
1.முதலில் 100 கிராம் அளவிளான வெள்ளை உளுந்தை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2.பிறகு உளுந்தில் உள்ள தண்ணீர் வடிய ஒரு வடிகட்டியில் கொட்டி 5 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும்.இதே மெத்தடை பச்சரிசிக்கும் செய்ய வேண்டும்.
3.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடானதும் வெள்ளை உளுந்தை போட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
4.அடுத்து பச்சரிசியை வாணலியில் கொட்டி வறுக்க வேண்டும்.இவை இரண்டையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
4.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி கட்டிபடாமல் கிளறிவிட வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் இட்லி பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இட்லி தட்டு வைத்து அதன் மீது காட்டன் துணியை வைக்க வேண்டும்.
6.பிறகு அரைத்த வெள்ளை உளுந்து கலவையை அதில் கொட்டி பரப்ப வேண்டும்.அடுத்து அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை அதில் போட்டு 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவிட வேண்டும்.
7.இப்படி செய்த பிறகு ஒரு கிண்ணத்தில் வெள்ளை உளுந்து புட்டை கொட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து அரை கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.பிறகு இரண்டு தேக்கரண்டி நெயில் 20 கிராம் முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து உளுந்து புட்டில் போட்டு கலந்துவிட வேண்டும்.இந்த புட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் பலமாக இருக்கும்.வெள்ளை உளுந்து புட்டு உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.