மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு செல்ல ஒரு முக்கிய கட்டுப்பாடு விதித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விடுமுறை நாட்களில் பலரும் குவிவதால் அதனை கட்டுப்படுத்த இந்த நடைமுறை எடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் அங்குள்ள இயற்கை வளங்களை மக்கள் பெரிதும் மாசுபடுத்துகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் பசுமை வரி அபராதம் என்னும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் சுமார் ஐந்து லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை எனவும், அதை மீறினால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் இ-பாஸ் எடுக்க https://epass.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறைக்கு முக்கிய காரணம் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், இயற்கை வளங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். இந்த மலை மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் பசுமை பள்ளத்தாக்கில் இருந்து வைகை அணையின் முழுத்தோற்றத்தையும் பார்க்க முடியும். இதனால் பல சிறப்பு அம்சங்கள் அங்கு உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடைக்கானலுக்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள்.