Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!!

#image_title

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!!

மனித உடலில் ஏற்படும் அனைத்து விதமான உபாதைகளுக்கும் நோய்களுக்கும் இன்றளவில் மருந்துகள் உள்ளன, நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவரை அனுகி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டால் நோய் நீங்கும்.

அவ்வாறு மருந்து, மாத்திரைகளில் தீர்க்க முடியாத நிலையில் உள்ள நோய்களுக்கே இன்றளவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்க்கொண்டு அதனை தீர்க்கின்றனர்.

எனவே எந்தவிதமான நோய்க்கு அல்லது பிரசவத்திற்க்கு அறுவை சிகிச்சை மேற்க்கொண்டாலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவரின் ஆலோசனை படி முறையான உணவு முறை மற்றும் தேவையான ஓய்வு எடுத்தால் மீண்டும் பழைய வாழ்க்கை முறையை வாழலாம்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்தவிதமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்,மலச்சிக்கல் வராமல் இருக்க நார்ச்சத்து நிறைந்த உணவு, அறுவை சிகிச்சை மேற்க்கொண்ட இடத்தில் உள்ள புண்கள் மற்றும் தையலை எளிதில் குணமாக்கும் புரதசத்து நிறைந்த உணவுகள், வீக்கத்தை குறைக்கக் கூடிய நல்ல கொழுப்பு அமில உணவுகள், தேங்காய் எண்ணொய், கடலை எண்ணொய், ஆலிவ் எண்ணொய், நிறைய பருப்பு வகைகள், மேலும் ஆன்டி ஆக்சிடேன்ட் நிறைந்த உணவுகளான புரோக்கோலி, கேரட், பீட்ருட், தயிர் முலைககட்டிய பயிர் மேலும் மினரல் நிறைந்த உணவுகளான மீன், முட்டை போன்ற சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால் உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

Exit mobile version