நீங்கள் பொது தேர்வு எழுத போறீர்களா? உங்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.அதனை தொடரந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
அதன் காரணமாக அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை முழுமையான பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற உள்ளது.அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் முதல் மாணவர்கள் அனைவரும் பொது தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.
மேலும் இம்மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதனையடுத்து ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது.மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பிளஸ் ஒன் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெறும்,மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பிளஸ் டூ வகுப்பிற்கு தேர்வுகள் நடைபெறவுள்ளது.
இதனை பற்றி மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தும் கொண்டு பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.அந்த பெயர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை பிப்ரவரி பத்தாம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் முறைப்படி மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.