உணவு சாப்பிட்டதும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ நிச்சயம் இந்த பக்க விளைவு ஏற்படும்!!
உணவு உட்கொண்ட பின்னர் ஒரு கிளாஸ் டீ அல்லது காபி குடித்தால் தான் உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது என்று சிலர் கூறி கேட்டிருப்பீர்கள்.சிலர் அதிகமாக உணவு உட்கொண்ட பின்னர் அதை கரைக்க டீ அல்லது காபி குடிப்பார்கள்.ஆனால் இந்த பழக்கம் பல்வேறு னாய்’பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.இது ஆரோக்கியத்திற்கு உகந்த பழக்கம் அல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
காலையில் எழுந்ததும் உடலுக்கு புத்துணர்வு கிடைக்க டீ அல்லது காபியுடன் அந்நாளை தொடங்கும் மக்கள் உணவு உட்கொண்ட பின்னர் இதுபோன்ற சூடான பானத்தை குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தின் மோசமாகிறது.
மூலிகை டீ,க்ரீன் டீ,தேயிலை டீ உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தாலும் அதை உணவு உட்கொண்ட பிறகு எடுத்துக் கொண்டால் உணவின் மூலம் கிடைக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
டீயில் காப்ஃபைன் என்ற பொருள் உள்ளது.இது செரிமான மண்டலத்தால் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்ச முடியாமல் தடுக்கிறது.இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.
அதே சமயம் மூலிகை டீ மற்றும் க்ரீன் டீ உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.இந்த வகை டீயில் அதிகளவு பாலிஃபீனால்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருக்கின்றது.ஆனால் உணவு உட்கொண்ட பின்னர் டீ குடிக்க கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரைகளாக இருக்கின்றது.டீயில் உள்ள பாலிஃபீனாக்,உணவின் மூலம் கிடைக்க கூடிய இரும்புச்சத்தை உறிஞ்சிவிடுகிறது.
எனவே உணவு உட்கொள்வதற்கு முன்னர் மற்றும் உணவு உட்கொண்ட பின்னர் ஒருமணி நேரம் இடைவேளை இருக்க வேண்டியது அவசியமாகும்.ஒருவேளை உங்களுக்கு வயிறு உப்பசம் ஏற்பட்டால் இஞ்சி டீ குடிக்கலாம்.இஞ்சி செரிமானத்தை தூண்டும் பொருள் என்பதினால் வயிறு உப்பச பிரச்சனைக்கு இஞ்சி தீர்வாக இருக்கின்றது.
ஆனால் இரும்புச்சத்து குறைபாடு,இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் உணவு உட்கொண்ட உடனே டீ,காபி போன்ற சூடான பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.