இன்று பலர் கழிப்பறைக்கு செல்லும் போது மொபைல் போன் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வெகு நேரம் செல்போனுடன் கழிப்பறையில் அமர்ந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகி விடும்.
கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.நெடு நேரம் கழிப்பறையில் செல்போன் பயன்படுத்தியபடி அமர்ந்திருப்பதால் முதுகு வலி,தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மலக்குடலில் அழுத்தம் ஏற்பட்டு பைல்ஸ் பிரச்சனை ஏற்படக் கூடும்.
கழிப்பறையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அது அஜீரணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.குடல் நோய்,சிறுநீர் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் வயிற்று பகுதியில் புழுக்கள் தேங்கி வயிறு ஆரோக்கியம் கெடும்.அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்திருந்தால் அங்கிருக்கின்ற பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் நுழைந்து நோய் தொற்றுக்களை ஏற்படுத்திவிடும்.
செல்போன் பயன்படுத்தியபடி நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே கழிப்பறைக்கு செல்லும் போது மொபைல் பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.