Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களா நீங்கள்!!! இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில் அனைவரும் கணிப்பொறி முன் அமர்ந்து தான் வேலை செய்கிறோம். அதுவும் அதிக நேரம் உட்கார்ந்து தான் வேலை செய்து வருகின்றோம்.

நாம் அனைவரும் தற்போதைய காலத்தில் தொடர்ந்து 3 மணி நேரம் 4 மணிநேரம் என்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறோம். அவ்வாறு நாம் அனைவரும் 2 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது நல்லது கிடையாது.

கணிணி சார்ந்த வேலை முறையில் பெரும்பாலும் உடல் உழைப்பு என்பது இருப்பது கிடையாது. உடல் உழைப்பை பயன்படுத்தி வேலை செய்யும் நபர்களுக்கு எந்த ஒரு நோயும் ஏற்படுவது இல்லை. ஆனால் தற்பொழுது அனைவரும் உடல் உழைப்பற்ற ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளை செய்வதால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.

இந்த பதிவில் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்…

* அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பொழுது ஸ்டிஃப்நெஸ் என்ற நிலை உருவாகின்றது.

* தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பொழுது உடலில் புரோட்டீஸ் பிரேக் டவுன் ஆகின்றது.

* அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பொழுது நமது நுரையீரல் மெதுவாக வேலை செய்கின்றது. இதனால் நுரையீரல் பிரச்சனை ஏற்படுகின்றது.

* அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பொழுது உடல் வலி அதிகரிக்கும். அதாவது தோல்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

* அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பொழுது இருதயக் கோளாறுகள் ஏற்படுகின்றது.

* ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யும் பொழுது முதுகுத் தண்டுவடம் பாதிப்பு அடைகின்றது. இதனால் உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைகின்றது.

* ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது உடல் எடை அதிகரிக்கின்றது.

* ஒரே இடத்தால் உட்கார்ந்து அதிக நேரம் வேலை செய்யும் பொழுது மூளை பாதிப்புகள் ஏற்படுகின்றது.

* தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது வெரிகோஸ் வெயின் நோய் அதிகரிக்கத் தொடங்கும்.

இதற்கு என்ன தீர்வு…

இந்த பாதிப்புகள் அனைத்தும் வரக்கூடாது என்று நினைத்தால் 2 மணிநேரம் கழிந்து எழுந்து 3 நிமிடம் நிற்கலாம். மேலும் காலை நேரத்தில் எழுந்தவுடன் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

Exit mobile version