நீங்கள் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா.. மலச்சிக்கலை அடியோட நீக்க இதை குடியுங்கள்!!
நமது உடல் சீராக இயங்க செரிமான மண்டலம் முறையாக வேலை செய்வது கட்டாயமானதாகும். செரிமான மண்டலம் அதனுடைய வேலையை செய்ய முடியவில்லை என்றால் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். நான் ஒன்னும் உணவு செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாவதுடன் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்காமல் போகும். இதனால் நாம் சாப்பிட்டால் கூட சோறுடன் இருப்பது போலவே உணர்வோம். அதுமட்டுமின்றி கூடுதலாக வாயுவு பிரச்சனையும் உண்டாகிவிடும். நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சீரகம் கால் ஸ்பூன்
வெந்தயம் கால் ஸ்பூன்
பெருஞ்சீரகம் கால் ஸ்பூன்
ஆளிவ் விதை கால் ஸ்பூன்
கொத்தமல்லி கால் ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிளாஸ் தண்ணீரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதி வருவதற்கு முன்பாகவே அனைத்து விட வேண்டும்.
குறிப்பு: (தண்ணீரைக் கொதிக்க விடக்கூடாது)
பின்பு இதனை வடிகட்டி சுவைக்கு ஏற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
காலை வெறும் வயிற்றில் இதனை மூன்று நாட்கள் குடித்து வர மலச்சிக்கல் செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகளோடு வாயு தொல்லையும் நீங்கும்.
டிப்ஸ் 2:
ஒரு டம்ளரில் குடிக்கும் பதத்திற்கு இருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
பின்பு இதில் நான்கு கிராம்பு அரை எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கொண்டு பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை காலை நேரத்தில் பருகிவர வாயு தொல்லை முற்றிலும் நீங்கும்.