நீங்கள் சரியான ஊசியை தான் போட்டுக் கொள்கிறீர்களா.. உஷார் மக்களே!

0
171
Are you putting in the right needle.. Be careful people!!

இன்றைய காலகட்டத்தில் நோய் பரவல் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.யாருக்கு எந்த நோய் ஏற்படும் என்று சொல்ல முடியாத ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை குணமாக்க மருந்து,மாத்திரை அவசியமாவையாக இருக்கிறது.

திரவ வடிவிலான மருந்தை உடலுக்குள் செலுத்த ஊசி பயன்படுத்தப்படுகிறது.இந்த ஊசி திடமாகவும்,ஈசியாக உடலில் நுழையவும் துருப்பிடிக்காத எஃகு அதாவது ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது.

மருவத்தில் ஊசியின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வரும் நிலையில் அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனித உடலில் செலுத்தப்படும் ஊசிகளில் பல வகைகள் இருக்கின்றது.நோய் தன்மைக்கு ஏற்ப ஊசிகள் மாறுபடும்.

ஊசிகள் வகைகள்:

1)இன்ட்ராடெர்மல்
2)இன்ட்ராவெனஸ்
3)இன்ட்ராமஸ்குலர்
4)சப்கியுடேனியல்
5)இன்ட்ராஸ்பைனல்
6)இன்ட்ராபெரிட்டோனியல்
7)இன்ட்ராஆசியஸ்
8)ட்ரான்ஸ்பியூஷன்ஸ்
9)இன்பியூஷன்ஸ்

ஊசிகளின் பயன்பாடு:

1)இன்ட்ராடெர்மல்

இந்த ஊசியின் மூலம் மருந்துகள் சருமத்தில் செலுத்தப்படுகிறது.

2)இன்ட்ராவெனஸ்

இந்த ஊசி பயன்படுத்தி நரம்புகளுக்கு மருந்து செலுத்தப்படுகிறது.

3)இன்ட்ராமஸ்குலர்

இந்த ஊசியின் மூலம் மருந்துகள் தசைகளுக்கு செலுத்தப்படுகிறது.

4)சப்கியுடேனியல்

இந்த ஊசி தோலுக்கு அடியில் மருந்து செலுத்த பயன்படுகிறது.

5)இன்ட்ராஸ்பைனல்

முதுகு தண்டுவட பகுதியில் மருந்து செலுத்த இன்ட்ராஸ்பைனல் பயன்படுத்தப்படுகிறது.

6))இன்ட்ராபெரிட்டோனியல்

பெரிட்டோனியல் குழிக்குள் மருந்து செலுத்த இன்ட்ராபெரிட்டோனியல் பயன்படுத்தப்படுகிறது.

7)இன்ட்ராஆசியஸ்

எலும்பு மஜ்ஜையில் மருந்து செலுத்த இன்ட்ராஆசியஸ் ஊசி பயன்படுத்தப்படுகிறது.

8)ட்ரான்ஸ்பியூஷன்ஸ்

நரம்பு மற்றும் தமனிகளில் இரத்தம் செலுத்த ட்ரான்ஸ்பியூஷன்ஸ் பயன்படுகிறது.

9)இன்பியூஷன்ஸ்

உடலுக்கு அதிக திரவ மருந்து செலுத்த இன்பியூஷன்ஸ் ஊசி பயன்படுத்தப்படுகிறது