இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உடனே இதைச் பண்ணுங்க!
நம்மில் ஒரு சிலருக்கு சளி பிடிக்கவில்லை என்றாலும் இடைவிடாமல் தும்மல் வரும். இந்த தும்மலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சளி பிடித்தால் மூக்கடைப்பு தும்மல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு சிலருக்கு சளி பிடிக்கவில்லை என்றாலும் இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணம் தூசி துகள்கள் சேராமல் இருக்கலாம்.
அவ்வாறு இடைவிடாமல் தும்மல் வரும் பொழுது ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வைத்தியங்களை செய்வார்கள். மேலும் ஒரு சிலர் ஆங்கில மருந்துகளை தேடிச் செல்வார்கள். இந்த பதிவில் இடைவிடாமல் வரும் தும்மலை நிறுத்த என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
* மிளகு
* திப்பிலி
* சுக்கு
செய்முறை:
மிளகு, திப்பிலி, சுக்கு இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு பொடியாக அரைத்து எடுத்து அப்படியே சாப்பிட வேண்டும்.
இந்த மருந்தை காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளில் சாப்பிட வேண்டும். அவ்வாறு இதை சாப்பிட்டு வந்தால் இடைவிடாமல் வரும் தும்மல் குணமாகும்.