மணிக்கணக்கில் செல்போனில் பேசும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை!
உலகில் மொபைல் போன் பயன்பாடு என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன்.ஆனால் மொபைல் இல்லாமல் இருக்க மாட்டேன் என்று பிறர் கூற கேட்டிருப்பீர்கள்.
அந்தளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் இந்தியாவில் உள்ளது.உலகிலேயே மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா என்பது ஆய்வின் மூலம் வெளியான தகவல்.உறவுகளை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் முன் பின் தெரியாத நபர்களிடம் தான் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்பவர்களே அதிகம்.
சிலர் காதில் செல்போன் வைத்து விட்டால் நேரம் போவது கூட தெரியாமல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்கு மேல் செல்போனில் பேசினால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
மணிக்கணக்கில் செல்போன் பேசுபவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள்:
1)உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.
2)இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்போனில் பேசினால் காது வலி,காது இரைச்சல்,காது ஜவ்வில் பிரச்சனை ஏற்படும்.
3)நீண்ட நேரம் மொபைலை பிடிப்பதால் கை வலி ஏற்படும்.அது மட்டுமின்றி கடுமையான
கழுத்து வலி,தோள்பட்டை வலி,உடல் வலி ஏற்படும்.
4)அதிக நேரம் மொபைல் பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகும்.
5)மொபைல் உள்ள ரேடியேஷன் உடல் சூட்டை அதிகரிக்கும்.அது மட்டுமின்றி மூளை,இதயம் பாதிப்படையும்.
6)ஹெட்செட் பயன்படுத்துவதால் அதிகளவு தலைவலி உண்டாகும்.