வயத்தவர்களுக்கு மட்டுமின்றி இளம் வயதில் இருப்பவர்களுக்கும் குதிகால் பகுதியில் கடுமையான வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த குதிகால் தொடர்பான பாதிப்புகள் குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – ஒன்று
2)வெந்தயம் – கால் தேக்கரண்டி
3)கசகசா – கால் தேக்கரண்டி
4)சீரகம் – கால் தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு வெற்றிலை எடுத்து காம்பு நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு இந்த வெற்றிலையில் கால் தேக்கரண்டி வெந்தயம்,கல் தேக்கரண்டி கசகசா மற்றும் கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
இந்த வெற்றலையை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)சுக்கு – ஒரு தேக்கரண்டி
3)கல் உப்பு – சிறிதளவு
4)எலுமிச்சை தோல் – இரண்டு
5)தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி ஓமத்தை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
அடுத்து ஒரு தேக்கரண்டி சுக்கு,ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.
ஸ்டெப் 03:
அடுத்து எலுமிச்சை தோல் இரண்டு போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஸ்டெப் 04:
இந்த நீரை இளஞ்சூடு பக்குவம் வரும் வரை ஆறவிட வேண்டும்.பிறகு கால்களை இந்த நீரில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.இப்படி தினமும் இரவு செய்து வந்தால் குதிகால் வலி,எரிச்சல் நீங்கும்.