தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் கொஞ்சம் ,கொஞ்சமாக, குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் வாரியம் வெளியிட்டிருக்கிறது.
அதனடிப்படையில், கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக நடைபெறவிருக்கின்றது. அதோடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகம் இந்த தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பில் தேர்வுகள் அனைத்தும் தேர்வு வாரியம் அறிவித்தபடி நடை பெறும். மாணவர்கள் தேர்வுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல தேர்வெழுதும் மாணவர்கள் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே விடைத்தாள்களில் பயன்படுத்த வேண்டும். கல்லூரிகளிலிருந்து நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் முறையாக பங்கேற்று தேர்வை குறிப்பிட்ட சமயத்தில் எழுதி முடிக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வரக்கூடாது தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வினாத்தாள் கல்லூரியிலிருந்து இணையதளத்தின் வழியாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல காலை 9 .30 மணி முதல் 10 .30 மணி வரையில் பல்கலைக்கழக இணையதளத்தில் வினாத்தாள்கள் இடம்பெறும் தேர்வு எழுதி முடித்தவுடன் மாணவர்கள் விடைத்தாளில் 1 மணி நேரத்திற்குள் ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில் இணையதளம் மூலமாக கல்லூரி முதல்வருக்கு அனுப்ப வேண்டும். அசல் விடைத்தாள்களை விரைவு அல்லது பதிவு தபால் மூலமாக தேர்வு நாள் அல்லது மறுநாள் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.