Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும்.

இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.தொண்டை வலியை எவ்வாறு எளிதில் சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

தொண்டை வலி என்பது வைரஸ் தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றினால் உருவாகிறது. குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயினால் தொண்டையில் கரகரப்பு, குரலில் மாற்றம், பேசுவதில் சிரமம் போன்றவைகள் ஏற்படும். அதனையடுத்து பாக்டீரியா தொற்று மூலம் தொண்டை வலி ஏற்பட்டால் காய்ச்சல், சளி, மூக்கடைப்பு,போன்றவைகள் ஏற்படும். அதற்கு நாம் முதலில் உப்பு நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வேண்டும். சூடான தேநீர், தண்ணீர் போன்றவர்களை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டை வலி ஒரே நாளில் குணமாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு டீஸ்பூன் ஸ்பூன் தேன் கலந்து தினம்தோறும் மூன்று வேளையும் பருகி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

 

 

Exit mobile version