இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது.
தேயிலை தேநீர்,காபி உள்ளிட்டவற்றை பருகுவதற்கு பதில் இந்த சீரகத்தை வைத்து தேநீர் செய்து பருகினால் இரத்த சோகை பாதிப்பு விரைவில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
*சீரகம் – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
*தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.சீரகத்தின் சத்து தண்ணீரில் இறஙகியதும் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.இவை சற்று சூடு தணிந்து வெதுவெதுப்பாக வந்ததும் அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் இரத்த சோகை பாதிப்பில் இருந்து விரைவில் குணமாகிவிடலாம்.