Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!!

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!!

கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் பிரச்சினை இருக்கும். சிவனை வழிபடுவது நன்மை உண்டாகும் என்பார்கள். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும். அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் நொடியில் தீரும் என்பது நம் பாரம்பரிய ஐதீகம். அப்படி நாம் எதை எழுதி வைக்க வேண்டும்? எந்த மரத்தில் எப்படி கட்ட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து கீழே உள்ள பதிவை படியுங்கள்.

கடன் தொல்லை தீர்வதற்கு சிவாய நம ஓம் என்கிற மந்திரத்தை தொடர்ந்து 108 முறை தினமும் உச்சரித்து வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.சிவ நாமத்தை உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் கெடுதல்கள் என்பதே ஏற்படுவதில்லை. சிவனுக்கு உகந்த வில்வ இலையைக் கொண்டு செய்யும் பரிகாரம் எப்பேர்ப்பட்ட கடனையும் நொடியில் தீர்க்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே முடியவில்லை என்பவர்களும், கொடுத்த கடனுக்கு வட்டியும் வரவில்லை அசலும் வரவில்லை என்று புலம்புபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

வில்வ இலையை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதனை சுருட்டி ஏதாவது ஒரு நூல் கொண்டு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய பூஜை அறையில் வைத்து உங்களுடைய கடன்கள் யாவும் தீர்வதற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு கோவிலுக்கு சென்று மூலஸ்தானத்தில் நின்று மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகளை வேண்டி என் கடன் எல்லாம் தீர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அந்த இலையை வேப்பமரத்தில் கட்ட வேண்டும். கோவில்களில் இருக்கும் வேப்ப மரத்தின் உச்சியில் சென்று வடக்கு பார்த்த கிளையாக பார்த்து கட்டி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கையில் இருக்கும் கடன் தொகைகள் அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது நம் ஐதீகம். கடன் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் இறைவனை முழுமையாக நம்புவது நல்லது.

அதிலும் சிவபெருமான், ஸ்ரீமன் நாராயணன், கால பைரவர், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தாலும் கடன் தொகைகள் அனைத்தும் தீரும். ராகு கால துர்க்கை பூஜை செய்பவர்கள் கடன் தொல்லை தீரவும் வேண்டிக் கொண்டால் சுப காரியம் மட்டுமல்ல! கடன் சுமையும் ஓடிவிடும்.

பைரவருக்கு விளக்கு தீபமேற்றி வந்தாலும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம். நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 27 மிளகுகளை வைத்து கருப்பு துணியில் கட்டி பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கடனும் காணாமல் காற்றில் கரையும். அவ்வரிசையில் இந்த வில்வ இலை பரிகாரமும் உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும்.

Exit mobile version