Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த காலத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன அழுத்தம் உருவாக காரணமாகிறது.

மனஅழுத்தத்தினால் அதிக அளவு பாதித்திருந்தால் மரணம் வரை கூட கொண்டு சென்று விடும். இதற்கு மருத்துவர்களிடம் ஆலோசனை மற்றும் தீர்வு பெறாவிட்டால் , அதிகஅளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபட நாள்தோறும் யோகா, தியானம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், ஒருசில உணவு வகைகளையும் சேர்த்து சாப்பிட்டால் மனஅழுத்தத்திலிருந்து எளிதாக விடுபட முடியும்.

தயிர்:
தயிரில் அதிக கால்சியம், பாஸ்பரஸ் கொண்டதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தயிரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் அதிக சத்து நிறைந்ததாகவும், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியதாகவும், இருக்கிறது.இது புரோட்டின், கால்சியத்துடன் மற்ற தாதுக்களையும் கொண்டது. மேலும் தயிரில் உள்ள டைரோசைன் என்னும், புரோட்டீன் மூளையில் உள்ள செரடோன், நியூரோ ஹார்மோன் அளவை அதிகரிப்பதால், மன அழுத்தத்தை உருவாக்கிவிட்டு நரம்புகளை அமைதியடையச் செய்கிறது.

டார்க் சாக்லேட்:

நாள்தோறும் டார்க் சாக்லேட்டை அதிகம் சாப்பிட்டுவருதால்,அதில் உள்ள ப்ளேவோனாய்டு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் தான் மனஅமைதியை அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் . டார்க் சாக்லேட் இதயக்கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
பழங்களை நாள்தோறும் சாப்பிட்டு வருவதால் இதில் உள்ள இயற்கையான இனிப்பு தன்மை, ருசி மனதை அமைதியடையச் செய்யவும். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடம்பிலுள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பாதாம்:

பாதாம் உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது.பாதாம் பருப்பை உற வைத்தோ அல்லது அப்படியே சாப்பிடுவதால், இதில் உள்ள வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற உட்டசத்துக்கள் இருக்கிறது. இது உடல் ஆரோக்கியம் மேம்பட செய்வதோடு, மன அழுத்ததிலிருந்து விடுபடவும் உதவுகிறது. பாதாம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Exit mobile version