Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

நம் உடலுக்கு சத்துக்களை தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உள்ள பங்குகளில் அதிக சதவீதம் பங்குகளை உடையது கீரை வகைகள். நம் முன்னோர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணமாக இருந்தது அதிக அளவில் கீரைகளையும் மூலிகைகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டது தான்.

அவர்கள் சேர்த்துக் கொண்டது ஒரு பங்கு அளவு நாம் எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறலாம். இந்த பதிவின் மூலம் அம்மான் பச்சரிசி இலையின் மகத்துவத்தை காணலாம். இந்த செடியானது பார்க்கும் இடத்தில் எல்லாம் காணப்படும்.
இதனை சித்திரப் பாலாடை, வெள்ளி பஸ்பம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த இலை வெப்ப தனிப்பானாகவும் பயன்படுகிறது.
இந்த இலை நாம் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கங்கள் உடனடியாக குறையும். உடலை வலுப்பெறச் செய்யும். அம்மான் பச்சரிசி இலை பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி அதனை சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் சூடுகள் குறையும்.

அதன் பிறகு பாதம் வீக்கம் குறையும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கும். இந்த இலையை அரைத்து அதிக வீக்கம் கொண்ட இடங்களில் வைத்து துணியினால் கட்டி வர வீகங்கள் குறையும். அதன் பிறகு குடலில் ஏற்படும் அல்சர் வாய்ப்புண் போன்றவைகள் குணமாகும். அல்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் பாசிப்பருப்பில் இந்த இலையை சேர்த்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடனடியாக விடுபடலாம்.

அம்மான் பச்சரிசியை அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் ஆண்களின் தாது உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும். அம்மான் பச்சரிசி இலையினை கிள்ளும் பொழுது வரும் பாலை மறு உள்ள இடத்தில் வைத்தால் ஒரு சில தினங்களிலேயே மறுக்கள் உதிர்ந்து விடும். மேலும் அம்மான் பச்சரிசி இலை கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

Exit mobile version