தலையில் பேன் தொல்லை அதிகமாக உள்ளதா!!! அதை சரி செய்ய சில எளிமையான டிப்ஸ் இதோ!!!
நம்மில் பலருக்கும் இருக்கும் பேன் தொல்லையை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலையில் பேன் தொல்லை என்பது அதிகமாக இருக்கும் ஒரு பிரச்சனை தான். நம் தலையில் இருக்கும். நம் தலையில் பேன்கள் மூன்று வகை நிறங்களில் இருக்கும். அதாவது கருப்பு, பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் பேன்கள் இருக்கும்.
இந்த பேன்கள் நம் உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்குகின்றது. மேலும் இந்த பேன்கள் நம் தலையில் நமைச்சலை உண்டாக்குகின்றது. நமக்கு இரவு நேரங்களில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனைக்கு பேன்கள் தலையில் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இந்த பேன் தொல்லையை ஒழிக்க பலவகையான ஷேம்புகள், எண்ணெய்கள் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த பேன்கள் நம் தலையில் இருந்து போகாது. மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த பேன் தொல்லையை நீக்குவதற்கு சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பேன்களை தலையில் இருந்து நீக்குவதற்கு எளிமையான டிப்ஸ்..
* பேன்களை தலையில் இருந்து நீக்க தலைக்கு பயன்படுத்தப்படும் பரமாரிப்பு பொருள்களை அதாவது சீப்பு, ஹேர் பின், ஹேர் பேண்ட் போன்ற பொருள்களை வாரம் ஒருமுறை சுடு தண்ணீரால் கழுவ வேண்டும்.
* பேன்களை தலையில் இருந்து நீக்க உங்களுடயை கூந்தல் பராமரிப்பு பொருட்களை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* பேன்களை தலையில் இருந்து ஒழிக்க முடிந்த வரை உங்களது படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டும்.
* பேன்களை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு மெடிக்கல் ஷாம்பு மற்றும் ஒரு சீப்பு பயன்படுத்த வேண்டும்.
* பேன்களை தலையில் இருந்து ஒழிக்க தலைக்கும் தலை முடிக்கும் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
* பேன்களை தலையில் இருந்து ஒழிக்க தேங்காய் எண்ணெயில் வேப்பிலையை போட்டு காய்ச்சி தலைக்கு தேய்க்க வேண்டும்.