தினமும் நைட் தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இந்த கசாயம் வச்சி குடித்தால் முழு பலன் கிடைக்கும்!!
இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.இரவில் தூக்கமின்மை பிரச்சனை பகலில் உடல் சோர்வு என்று மனிதர்களின் உடல் ஆரோக்கியம் மெல்ல மெல்ல கெட்டு வருகிறது.குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை அனுபவித்தாக வேண்டும்.நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் அவை பல நோய்கள் உருவாக வழிவகுத்துவிடும்.
தூக்கமின்மைக்கான காரணங்கள்:
*மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல்
*ஆஸ்துமா
*சளி தொந்தரவு
*இரவில் அதிகளவு உணவு எடுத்துக் கொள்ளுதல்
*கண் எரிச்சல்
*மனச் சோர்வு
*வயிறு உப்பசம்
தூக்கமின்மையை போக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள் இதோ..
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை
2)சுக்கு
3)மிளகு
4)சீரகம்
5)பாதாம் பிசின்
6)முருங்கை இலை
செய்முறை:-
முதலில் இரண்டு கொத்து வேப்பிலை,1/4 கப் முருங்கை இலையை நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம்,1/2 தேக்கரண்டி மிளகு,ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.இதனுடன் உலர்த்தி வைத்திருக்கும் முருங்கை இலை மற்றும் வேப்பிலை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் மூலிகை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்து குறைவான தீயில் கொதிக்கவிட்டு குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)பசும்பால்
2)மஞ்சள் தூள்
3)மிளகுப் பொடி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் பசும் பால் ஒரு டம்ளர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் சிட்டிகை அளவு மிளகுப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை இரவு நேரத்தில் அருந்தி வந்தால் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியும்.