அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்!

0
194

அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் காலநிலைகள் மாறுவதினாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் நமக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்

குறிப்பாக அரிப்பு, சொரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேம்பல், போன்ற பிரச்சனைகளால் தான் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தோல் நோய் என்றாலே நம் உடலில் அதிக அளவு கழிவுகள் தேங்குவது தான்.

ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருந்தால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும்.சரியான நேரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்காததால் தான் நம் உடலில் கழிவுகள் தேங்கி இது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றது.

தேவையான பொருட்கள்: குப்பைமேனி இலை பொடி இரண்டு ஸ்பூன்,வேப்பிலை பொடி இரண்டு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 100 மிலி.

செய்முறை:

100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் குப்பைமேனி இலை பொடி மற்றும் வேப்பிலை பொடி இரண்டையும் நன்கு கலந்து அதனை காய்த்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனை ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நமக்கு அரிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் அரிப்பு உடனடியாக குணமாகும்.