Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!

#image_title

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்! 

அனைவரையும் வாட்டும் பிரச்சினைகளில் ஒன்று கால் வலி. தற்போதைய உணவு மாற்றங்களால் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய பசங்களுக்கும் கூட கால் வலி பிரச்சனை ஏற்படுகிறது. கால் வலி வந்து விட்டால் அவர்களால் சரியாக தூங்கக்கூட முடியாது.

கால் வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நாம் ஒரு நாளில் நீண்ட நேரம் நிற்பது மூலம் நமது உடல் பாரத்தை கால்கள் தாங்குவதால் ஏற்படலாம். மேலும் உடல் பருமன், எலும்பு மூட்டு இணைப்பில் உள்ள காயம், தசைநார்களில் கிழிசல், மற்றும் ரத்தம் உறைதல் காரணமாக கால் வலி பிரச்சனை வரலாம்.

இந்த கால் வலி பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஒரே நாளில் சரி செய்யும் வழி முறையை பார்ப்போம்.

இதை மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வர நிரந்தரமாக உங்களுக்கு கால் வலி பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும்.

* ஒரு மிக்சிங் பவுலை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் சுத்தமான நல்லெண்ணையை சேர்க்கவும்.

* அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு சுத்தமான விளக்கெண்ணெய் சேர்க்கவும். அடுத்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* இதை நன்றாக கலக்கிக் கொள்ளவும். நன்றாக கலந்ததும் இதை காற்று போகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஏழு நாட்கள் வரை வெளியிலே வைத்து பயன்படுத்தலாம்.

இதை வலி அதிகம் உள்ள இடங்களான மூட்டுப்பகுதி, தசை பகுதி மற்றும் குதிகால் பகுதிகளில் தடவி விடலாம். தடவி அப்படியே விடக்கூடாது. 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.

இதை அப்படியே 2 மணி நேரம் ஊற விடலாம். அல்லது இரவு தேய்த்து விட்டு காலை வழக்கம் போல் குளிக்கலாம்.  ஆயிலை முழுவதும் உடல் உறிஞ்சி கொள்ளும்.

இதை தினமும் இரண்டு முறை தேய்க்கும் பொழுது உங்களுக்கு கால் வலி சுத்தமாக இருக்காது. இது ஒரே நாளில் சரியாகும் என்றால் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு வேளை விதம் மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் தான் உங்களுக்கு கால் வலி இருந்த இடம் தெரியாமல் போகும்.

தசைப்பிடிப்பு நீங்கி ரத்த ஓட்டம் சீராகி உங்களது கால்கள் நன்றாக சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். அவ்வளவு அற்புதம் வாய்ந்த இயற்கை வைத்தியம் இது.

 

 

Exit mobile version