இதை செய்த 5 நிமிடத்தில் படர்தாமரை அரிப்பு நீங்கிவிடும்!!
நம்மில் சிலருக்கு படர் தாமரை என்று அழைக்கப்படும் தோல் தோய் இருக்கும். இதை குணப்படுத்த மருந்துகள் மாத்திரைகள் எடுதாதும் முடியாமல் மன வேதனையில் தவித்துக் கொண்டிருப்பீர்கள்.
அந்த படர் தாமரை நோயை குணப்படுத்த இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
படர் தமாரை என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு விதமான தோல் நோய். இது அதிதமாக விளையாட்டு வீரர்களுக்கு வரக்கூடும். கைகளின் அக்குள் பகுதி, கால் விரல்களின் இடுக்குகள், கழுத்துப் பகுதி, தொடைப் பகுதி ஆகிய இடங்களில் படர் தாமரை நோய் வரக்கூடம்.
இந்த படர் தாமரை நோய் எதனால் வருகின்றது என்றால் நாம் அணியும் ஆடைகள் சுத்தம் இல்லாமல் இருப்பதாலும், நாம் சுத்தமாக இல்லாமல் இருப்பதாலும் வருகின்றது.
இந்த படர் தாமரை நோயை சரி செய்ய இந்த பதிவில் அற்புதமான வீட்டு வைத்தியதாதை பார்க்கலாம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்;
* பாவற்காய்
* எலுமிச்சை பழம்
* மஞ்சள் தூள்
* ஆலிவ் எண்ணெய்
செய்யும் முறை:
முதலில் எடுத்து வைத்துள்ள பாவற்காயை ஒரு சிறய பாத்திரத்தில் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் எலுமிச்சை சாறு சிறிதளவும், மஞ்சள் பொடி சிறிதளவும், ஆலிவ் ஆயில் சிறிதளவும் சேர்த்து நன்கு அழுத்திக் கொள்ளவும். அதிலிருந்து சாறு வரும் வரை அழுத்தவும்.
பிறகு இந்த பேஸ்டை படர் தாமரை இருக்கும் இடத்தில் தடவி விட வேண்டும். பத்து போல இந்த பேஸ்டை உடலில் படர் தாமரை இருக்கும் இடங்களில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து இதை கழுவ வேண்டும்.
தொடர்ந்து இந்த பேஸ்டை தயார் செய்து படர் தாமரை இருக்கும் இடங்களில் தடவி வந்தால் படர் தாமரை இருக்கும் இடம் தெரியாமல் குணமாகும்.
பாவற்காயில் இருக்கும் ஆன்டி பங்கல் சத்துக்கள் படர் தாமரையை முற்றிலும் குணப்படுத்த உதவுகின்றது.
எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பங்கல் சத்துக்கள் இந்த படர் தாமரை நோயை அருமையாக குணப்படுத்தி கொடுக்கும்.
மஞ்சள் பொடி பொதுவாகவே ஒரு ஆன்டி செப்டிக் மருந்து தான். இந்த மஞ்சள் பொடியை நம் சருமத்திற்கும் தோலுக்கும் பயன்படுத்தினால் எல்லா வகையான சருமப் பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.
ஆலிவ் ஆயிலை ஏன் சேர்க்கிறோம் என்றால் படர் தாமரை உள்ள இடங்களில் ஏற்படும் அரிப்பையும், எரிச்சலையும் தடுக்கத்தான்.