உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!
நம்மில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் சிலர் பயந்து மருத்துவர்களை அணுகுவார்கள். இதற்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. வியர்வை என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனை உடலில் அதிகம் நீர் உள்ளவர்களுக்கு வரக்கூடும்.
அதிகம் வேலை செய்து கொண்டிருந்தால் வியர்வை வருவது இயல்பு. ஆனால் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிகம் வியர்வை வரும் பொழுது பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு ஏசியில் இருக்கும் பொழுதே வியர்வை வரத் தொடங்கும். ஒரு சிலருக்கு காற்று அதிகமாக இருந்தாலும் வியர்வை வரும். இதற்கு உடல் சூடு கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
எனவே வியர்வை அதிகமா வெளியேறினால் இனி பயப்படத் தேவையில்லை. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வந்தாலே போதும். அது என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
வியர்வை அதிகமாக வரும் பொழுது செய்ய வேண்டியவை…
வேப்பிலை மற்றும் மஞ்சள்…
வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டுமே மருந்துப் பொருட்கள் ஆகும். இதில் உள்ள சத்துக்கள் நம்மை அனைத்து விதமான நோய்களில் இருந்தும் காப்பாற்றும். இவை இரண்டும் சருமம் சார்ந்த பிரச்சனைகளையும் குணப்படுத்தும். இவற்றை அரைத்து விழுதாக சருமத்தில் பூசி வந்தாலும் சரும பிரச்சனைகளான கரும்புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் நீங்கும். வியர்வை அதிகமாக வரும் பொழுது வேப்பிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நாம் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும் காய்ச்சிய பிறகு இந்த நீரை பயன்படுத்தி நாம் குளித்தால் வியர்வை அதிகமாக வெளியேறாது. மேலும் உடலில் உள்ள வியர்க்குரு, அரிப்பு, நீறமாற்றம் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.
ஆவாரம் பூ…
இரண்டாவது வழிமுறையாக நாம் ஆதாரம் பூவை பயன்படுத்தலாம். ஆதாரம் பூவிலும் பலவகையான சத்துக்கள் உள்ளது. நம் சருமத்திற்கு பல நன்மைகளை ஆவாரம் பூ தருகின்றது. ஆவாரம் பூவை டீ வைத்து கூட குடிக்கலாம். அதிகமாக வரும் வியர்வை குறைக்க இந்த ஆதாரம் பூவை அரைத்து உடலில் பூச வேண்டும். பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் வரும் அதிகப்படியான வியர்வை குறையும். மேலும். வியர்வை வாடை வராது.